ஊட்டி: 30 ஏக்கரில் உன்னிச்செடிகள் அகற்றம் - கட்டிகளாக மாற்றம்

276பார்த்தது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் அந்நிய தாவரமான உன்னிச் செடிகள் 30 ஏக்கர் பரப்பளவில் நேற்று வெட்டி அகற்றப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட செடிகள் அரைக்கப்பட்டு விறகுக்காக கட்டிகளாக தயாரிக்கப்பட்டு, தற்போது 9 டன் கட்டிகள் தயாராக உள்ளன. இவை கூடலூர் சாலிஸ்பெரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. மழைக்கால ஈரப்பதம் காரணமாக உற்பத்தி தடைபடாத வகையில் ரூ. 18 லட்சம் மதிப்பில் டிரையர் எந்திரம் வாங்கவும், சிமெண்ட் தளம் அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி