ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த அயூப் (39) மற்றும் முகமது அயூப் ஜாபர் (35) ஆகியோர், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 85 லட்சம் மோசடி செய்துள்ளனர். கார்களை விற்றவர்களுக்கு முழுப் பணத்தையும் வழங்காமல் இழுத்தடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் 31 வாகனங்கள் மூலம் ரூ. 85 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. முகமது ஜாபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அயூப் கோவை உக்கடத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.