நீலகிரி மாவட்டம் குன்னூர் ஸ்பிரிங்பீல்டில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் 5 ஏக்கரில் அமைக்கப்பட்ட பட்டு உலகம் பொழுதுபோக்கு பூங்காவை அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார். ரூ. 75 லட்சம் மதிப்பில் உருவான இப்பூங்காவில் மல்பெரி நடவு முதல் பட்டு நெசவு வரை செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். கூடுதலாக ரூ. 10 லட்சத்தில் ராக் கார்டன், ரூ. 85 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.