உதகை அருகே மனித உயிரை பலிகொண்ட புலியைப் பிடிக்க வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில், எதிர்பாராதவிதமாக ஒரு சிறுத்தை சிக்கியது. சமீபத்தில் காட்டுப் பகுதியில் புலி தாக்கி பெண் உயிரிழந்த நிலையில், புலியைப் பிடிக்க பல இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று காலை அமைக்கப்பட்ட கூண்டில் புலிக்குப் பதிலாக சிறுத்தை சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் சிறுத்தையைப் பாதுகாப்பாக மீண்டும் காட்டுக்குள் திறந்து விட்டனர்.