ஊட்டி அருகிலுள்ள சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் ஒற்றை காட்டு யானை அடிக்கடி நடமாடுவதால் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் எண்ணிக்கை உயர்ந்து, தீவனப் பற்றாக்குறை காரணமாக அவை குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. யானை சாலையோரப் பகுதிகளில் தோன்றி சாலையைக் கடக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வனச்சரகர் ராம்பிரகாஷ், யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் யானையைப் பார்த்தால் புகைப்படம் எடுக்காமல் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.