ஊட்டி: சாலையில் 2 கி. மீ. உலா வந்த காட்டுயானை!

0பார்த்தது
ஊட்டி: சாலையில் 2 கி. மீ. உலா வந்த காட்டுயானை!
கூடலூர் அருகே கம்மாத்தி–கூடலூர் சாலையில் ஒரு காட்டுயானை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து, நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவில் அருகே நின்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. முன்னதாக கம்மாத்தி பகுதியில் நுழைந்த யானை பாக்கு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சாலைக்கு வந்து உலா வந்த யானையை வனத்துறையினர் கண்காணித்தனர். மோட்டார் சைக்கிள்களில் வந்த அய்யப்ப பக்தர்கள் யானையை கண்டு அச்சமடைந்து திரும்பிச் சென்றனர். யானை சிவன்மலை வனப்பகுதி நோக்கி சென்றது. உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். காட்டுயானையை அடர்ந்த காடு பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி