ஊட்டி அருகே கொதுமுடி கிராமத்தில், அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மலர்கொடி (45) என்ற பெண், புதரில் மறைந்திருந்த காட்டெருமையால் தாக்கப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த பெண்ணின் இறுதிச்சடங்குக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதுடன், ரூ. 9.5 லட்சம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.