ஓய்வுக்காக ஊட்டி வந்த ரஜினிகாந்த்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

0பார்த்தது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்குப் பிறகு ஓய்வெடுக்கவும் புத்துணர்ச்சி பெறவும் இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்துள்ளார். சென்னையின் வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் தேடி அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், தினமலர் தாமரை பதிப்பகம் வெளியிட்ட 'ஊட்டி சுற்றுலா உலகின் சுவாசம்' நூலை ரசிகர்கள் அவருக்கு பரிசாக வழங்கினர்.