ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடக்கம்

320பார்த்தது
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று (மே 14) புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கலெக்டர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார். இந்த ஆண்டின் சிறப்பம்சமாக 'பறவைகளின் சொர்க்கம்' என்ற கருப்பொருளில் 2 லட்சம் ரோஜா மலர்களால் பல்வேறு பறவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 70 ஆயிரம் ரோஜாக்களால் செய்யப்பட்ட அன்னப்பறவை ஜோடி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. பூங்காவில் 4,301 ரகங்களைச் சேர்ந்த 33 ஆயிரம் ரோஜா செடிகள் வண்ணமயமாக பூத்துக் குலுங்குகின்றன.

தொடர்புடைய செய்தி