குன்னூர்: வாகன விபத்து..ரத்த வெள்ளத்தில் பலியான வாலிபர்

85பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருசக்கர வாகனம் மற்றும் டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடக்கும் முன் இருசக்கர வாகனம் மேல்நோக்கிச் செல்வதும் விபத்து முடிந்த பின் டிப்பர் லாரி கீழ்நோக்கி வருவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் காட்டேரி சேலாஸ் செல்லும் சாலையில் கிளன்டேல் தனியார் எஸ்டேட்டில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (32) ஊர் திருவிழா என்பதால் செலவுகளை வாங்க இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சேலாஸ் சென்று கொண்டிருந்த அப்போழுது, கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியில் மேலிருந்து கீழ்நோக்கி வந்த டிப்பர் லாரியும் சுராஜ் சென்ற இருசக்கர வாகனமும் மோதியதில் சுராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர் பலத்த காயங்களுடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுராஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து கொலக்கம்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி