நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் உள்ள அய்யன்கொல்லி, சன்னகொல்லி, தட்டாம்பாறை பகுதிகளில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று சன்னகொல்லியில் ஒற்றையான் மாம்பழங்களை தின்றதால் மக்கள் பீதியடைந்தனர். கோட்டப்பாடி பகுதியில் யானைகள் சாலையை மறித்ததால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.