குன்னூரில் கோடை விழாவையொட்டி, தோட்டக்கலைத் துறை சார்பில் 2-வது மலைப்பயிர்கள் கண்காட்சி நேற்று (மே 22) தொடங்கியது. 22 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், 10 டன் மலைப்பயிர்களைப் பயன்படுத்தி பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கடலோர வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில் மீனவ பெண்களின் முக்கியத்துவம் கருப்பொருளாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை, காப்பி, தென்னை, நுங்கு, பாக்கு போன்ற பயிர்களைக் கொண்டு நங்கூரம், துடுப்பு, சங்கு போன்ற வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.