நீலகிரி மாவட்டம் கூடலூர் மார்த்தோமா நகரில் குளிர்பானம், பிரியாணி மற்றும் வாகன உதிரிபாக கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தாலும், கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமாயின. தனது கடை எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வியாபாரி சாதிக் பாபு (55) மயங்கி விழுந்து உயிரிழந்தார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.