கூடலூர் அருகே தேவன்-2 முதல் நெல்லிக்குன்னு செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் மதுபோதையில் தள்ளாடியவரை வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மீட்டு இன்று வீட்டில் ஒப்படைத்தனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானை, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இரவில் தனியாகவோ போதையிலோ நடக்க வேண்டாம். மீறினால் நடவடிக்கை என வனத்துறை எச்சரித்துள்ளது.