குன்னூரில் மார்க்கெட்டில் கார்பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுக்காக பழைய கடைகளை மாற்றும் நகராட்சி நிர்வாகத்தின் முடிவுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்காலிக கடைகள் அமைத்தும், பாதுகாப்பு இல்லை எனக்கூறி அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். பழமையான கடைகளை இடிக்கக்கூடாது என வலியுறுத்தி காலவரையற்ற கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடத்துவதால், உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.