குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நீர் பனிப்பொழிவு அதிகரித்ததால், நடவு செய்யப்பட்டிருந்த மலர்கள் அழுகி வருகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 2-வது சுற்றுலா சீசனுக்காக 1.90 லட்சம் மலர் நாற்றுகள் நடப்பட்டிருந்தன. பால்சம், சால்வியா, காஸ்மாஸ், ஜின்னியா போன்ற மலர்கள் பூத்து குலுங்கினாலும், தற்போதைய கனமழை மற்றும் நீர் பனிப்பொழிவால் பல மலர்கள் அழுகி, புல்வெளிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூங்காவின் அழகு குறைந்து, சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.