கூடலூரில் வயது முதிர்ந்த சிறுத்தை சடலமாக மீட்பு

217பார்த்தது
கூடலூரில் வயது முதிர்ந்த சிறுத்தை சடலமாக மீட்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பிரிவுக்குட்பட்ட மே பீல்ட் எஸ்டேட் அருகே வயது முதிர்ந்த சிறுத்தை ஒன்று இன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் சடலத்தை மீட்டனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு நடத்தி வருகின்றனர். அறிக்கை வெளியான பின்னரே சிறுத்தை உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி