கூடலூரில் கடையில் தீ விபத்து!

1பார்த்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர் மார்தோமா நகர் பகுதியில் நேற்று இரவு ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகை மற்றும் தீ மளமளவென பரவியதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி