கூடலூர்: தெப்பக்காடு பகுதியில் பெண் புலி இறப்பு

66பார்த்தது
கூடலூர்: தெப்பக்காடு பகுதியில் பெண் புலி இறப்பு
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் (டிசம்பர் 21) ஒரு பெண் புலி இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த சம்பவம் தெரியவந்தது. இறந்த புலியை பரிசோதித்ததில், அது சுமார் 6 வயதுடைய பெண் புலி எனவும், இயற்கை காரணங்களால் இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த புலியின் உடலை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து, பின்னர் எரித்தனர்.

தொடர்புடைய செய்தி