கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி நோக்கி நேற்று சென்ற அரசு பஸ், நாடுகாணி பாண்டியாறு குடோன் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். அச்சமடைந்த பயணிகள் பஸ்சை விட்டு வெளியேறினர். பின்னர், சேதமடைந்த பஸ்சை பணிமனை ஊழியர்கள் கூடலூருக்கு கொண்டு சென்று, பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.