கூடலூர்: ராகுல் காந்தி வருகை.. பலத்த பாதுகாப்பு

0பார்த்தது
கூடலூர்: ராகுல் காந்தி வருகை.. பலத்த பாதுகாப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். ராகுல் காந்தி டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் கூடலூர் வந்து, அங்கிருந்து காரில் விழா நடைபெறும் பள்ளிக்குச் சென்று பங்கேற்பார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் திருச்சூர் புறப்படுகிறார். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி