கூடலூர்: மரம் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

174பார்த்தது
கூடலூர்: மரம் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கூடலூர் மரப்பாலம் அருகே கோழிக்கோடு சாலையில் நேற்று மரம் விழுந்ததால், கூடலூர்–ஊட்டி மற்றும் கேரளா இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு, பயணிகள் சிரமத்துக்குள்ளானனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை அகற்றி, காலை 6 மணியளவில் போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் நீலகிரி–கேரளா இடையே சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி