கூடலூர்: யானை தாக்கி பெண் பலி

346பார்த்தது
கூடலூர்: யானை தாக்கி பெண் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணி பகுதியில், வனத்துறையினர் தடை விதித்திருந்த பாண்டியாறு- புன்னம்புழா ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற பெண் காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி (50) தனது கணவர் மற்றும் உறவினருடன் ஆற்றில் மீன் பிடித்துவிட்டு திரும்பும்போது, இருளில் வனப்பகுதி வழியாக நடந்து வந்துள்ளனர். அப்போது திடீரென காட்டு யானை அவர்களைத் துரத்தியதில், மீனாட்சி யானையிடம் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி