நீலகிரி மாவட்டம், வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்கிறது. இங்குள்ள உதகை அருகே கள்ளக்கெரை கிராமத்தில், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு பிராணியான கன்று குட்டியை வேட்டையாடி இழுத்துச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.