வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று (ஆகஸ்ட் 17) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.