நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உதகை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 38 கிராம ஊராட்சிகளில் இருந்து 12 ஊராட்சிகளைப் பிரித்து குந்தா ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 22 ஊராட்சிகளில் இருந்து 13 ஊராட்சிகளைப் பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.