நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சி பகுதியில், யானை வழித்தடத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுமார் 1,300 சதுரஅடி பரப்பளவு கொண்ட விடுதி கட்டிடம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று இடிக்கப்பட்டது. வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த காலன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், பெங்களூரைச் சேர்ந்த திவாக ரத்தினம் என்பவருக்கு சொந்தமான இந்த கட்டிடம் அகற்றப்பட்டது. கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி தலைமையில் வருவாய்த்துறை, போலீசார், வனத்துறை அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.