நீலகிரி: வாக்குப்பதிவு இயந்திரம்-செயல்முறை விளக்கம்

128பார்த்தது
உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித ஜோசப் பி. எட் ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில், எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு அச்சுப்பெட்டி (VVPAT) பயன்படுத்தும் முறை குறித்து அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர். முதன்முறையாக வாக்களிக்க உள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, வாக்குப்பதிவு நடைமுறை குறித்து கேள்விகள் எழுப்பி விளக்கம் பெற்றனர். இளம் வாக்காளர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஜனநாயக கடமையை பொறுப்புடன் நிறைவேற்றும் மனப்பாங்கை உருவாக்குவதும் இதன் நோக்கமாக இருந்தது.

தொடர்புடைய செய்தி