நீலகிரி: குழாயை திறந்து தண்ணீர் குடித்த காட்டு யானை

438பார்த்தது
நீலகிரி: குழாயை திறந்து தண்ணீர் குடித்த காட்டு யானை
கூடலூர் தாலுகாபகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சம்பவதினத்தன்று இரவு மாரக்கரை குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ஒரு காட்டு யானை, லீலா என்பவரது வீட்டின் குழாயைத் திறந்து தண்ணீர் குடித்து தாகம் தணித்தது. இந்த அழகான காட்சியை பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தாலும், செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். யானை தண்ணீர் குடித்த பிறகு மெதுவாக அங்கிருந்து சென்றது. யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி