நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து தங்காடு கிராமத்திற்கு தனியார் சிற்றுந்து சென்றபோது, மணலாடா அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதன்கிழமை நடந்த இந்த விபத்தில் 36 பேர் பயணித்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வந்த பவளம் (60) என்பவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மேலும் மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.