ஊட்டி: கஞ்சா பயன்படுத்திய 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

0பார்த்தது
ஊட்டி: கஞ்சா பயன்படுத்திய 3 காவலர்கள் பணியிடை நீக்கம்
நீலகிரி மாவட்டம் உதகையில் கஞ்சா விற்பனை தொடர்பாக நடந்த போலீஸ் விசாரணையில், காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த மாதம் 21ம் தேதி குரூஸ் (20) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் உதகை மத்திய காவல் நிலைய காவலர் நசீர் அகமது தொடர்புடையவர் என தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாக எருமாடு காவல் நிலையத்தைச் சேர்ந்த அபிசேகரன், கோத்தகிரி காவல் நிலையத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன் மற்றும் மசினகுடி காவல் நிலையத்தைச் சேர்ந்த சாந்தகுமார் ஆகிய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி