ஊட்டி: 8 பவுன் நகை திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை!

0பார்த்தது
ஊட்டி: 8 பவுன் நகை திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை!
ஊட்டி ஏ. டி. சி. பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் வசிக்கும் வாசிம் (30) என்பவர் குடும்பத்துடன் பெற்றோரை பார்க்க சென்றிருந்தபோது, மர்மநபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவரது மனைவியின் 8 பவுன் நகை (சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புடையது) திருடிச் சென்றனர். இது குறித்து வாசிம் அளித்த புகாரின் பேரில் ஊட்டி மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீசார் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி