நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த 45 வயது விதவைப் பெண்ணிடம், இங்கிலாந்து என்ஜினீயர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபர், திருமணம் செய்வதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறி, ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் எனப் பணம் பறித்ததோடு, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தயாரிக்கப்பட்ட போலி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். சந்தேகமடைந்த பெண் ஊட்டி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.