ஊட்டி: இரும்பு குழாயில் சிக்கிய எருமை

275பார்த்தது
ஊட்டி: இரும்பு குழாயில் சிக்கிய எருமை
ஊட்டியில் உள்ள தாமஸ் ஆலய வளாக நுழைவுப் பகுதியில் தரையில் பதிக்கப்பட்டிருந்த இரும்பு குழாய்களில் நேற்று ஒரு எருமையின் கால்கள் சிக்கி தவித்தது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் அரை மணி நேர முயற்சிக்குப் பிறகு எண்ணெய் ஊற்றி எருமையை பாதுகாப்பாக மீட்டனர். ஊட்டியில் கால்நடைகள் சாலைகளிலும் பொதுஇடங்களிலும் சுற்றித் திரிவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி