பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே புஞ்சகொல்லி பகுதியில் நேற்று எல்சம்மா (59) வீட்டில் பசு மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென வந்த சிறுத்தை இரண்டு மாடுகளை தாக்கியது. எல்சம்மாவையும் தாக்க முயன்றது, ஆனால் அவர் சத்தமிட்டு ஓடியதால் உயிர் தப்பினார். பொதுமக்கள் திரண்டு வந்து சிறுத்தையை விரட்டினர். இந்த தாக்குதலில் 4 வயது பசு மாடு உயிரிழந்தது, 2 வயது பசு மாடு காயமடைந்தது. வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.