ஊட்டி: வீடு வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி

0பார்த்தது
ஊட்டி: வீடு வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி
ஊட்டியில், வீடு வாங்கித் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக ஷாயின்ஷா என்ற புரோக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர். நொண்டிமேட்டை சேர்ந்த ஷாயின்ஷா, ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த இக்பால் கான் என்பவரிடம் இருந்து வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ. 5 லட்சம் பெற்றதாகவும், வீடு வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. ஒரே வீட்டை பலருக்கு காட்டி பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து இக்பால் கான் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஷாயின்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி