ஊட்டி: கோத்தகிரியில் சிறுத்தை தாக்குதல்: ஒருவர் படுகாயம்

0பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் நேற்று இரவு நுழைந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது நாயை காப்பாற்ற முயன்ற ஒருவரை சிறுத்தை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த நபர் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பள்ளி வளாகம் அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தையை பிடித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி