கூடலூர் அருகே முக்கட்டி பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் நேற்று இரவு முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.