ஊட்டி: வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஆய்வு

0பார்த்தது
ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து போலீஸ் பார்வையாளர் லதா மனோஜ், கலெக்டர் லட்சுமி பவ்யா ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகள், எண்ணும் அறைகள், நுழைவு-வெளியேறும் பாதைகள், கண்காணிப்பு கேமரா அமைப்புகள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் பரிசோதிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி