நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சீகூர் வனப்பகுதிகளில் புலி மற்றும் காட்டு யானை நேற்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மாயாறு ஆற்றங்கரையில் இறந்த புலியை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தனர். ஆனைகட்டி பகுதியிலும் காட்டு யானை பல நாட்களுக்கு முன் இறந்ததும் தெரியவந்துள்ளது. இரு விலங்குகளின் இறப்புக்கான காரணம் உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.