நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லம் செல்லும் சாலையில் இன்று இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் காயமடைந்து உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.