ஊட்டி: மலைப்பாதையில் காட்டு யானை உலா.. வாகன ஓட்டிகள் அச்சம்

224பார்த்தது
ஊட்டி: மலைப்பாதையில் காட்டு யானை உலா.. வாகன ஓட்டிகள் அச்சம்
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலாப்பழ சீசன் காரணமாக வந்த காட்டு யானைகள், மழை காரணமாக வனப்பகுதி பசுமையாக இருப்பதால் அங்கிருந்து செல்லாமல் முகாமிட்டுள்ளன. நேற்று, கோத்தகிரி–மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் கீழ்தட்டப்பள்ளம் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஒரு காட்டு யானை சாலையில் இறங்கி கடந்து சென்றது. யானை சாலையை கடந்து சென்ற பின்னரே வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

தொடர்புடைய செய்தி