தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண சலுகை அட்டையை பெற ஜனவரி 7 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு விடுமுறை தினங்கள் தவிர, தாலுகா இ-சேவை மையங்கள் அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல், புகைப்படம் உள்ளிட்ட தேவையான சான்றுகளுடன் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலம் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.