பந்தலூர்: போலீசார் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்!

1பார்த்தது
பந்தலூர்: போலீசார் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்!
பந்தலூர் அருகே முக்கட்டி பகுதியில் வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் நேற்று போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூடலூர்-தேவர்சோலை மற்றும் பந்தலூர்-குந்தலாடி வழியாக கேரளா செல்லும் முக்கியச் சாலைகள் சந்திக்கும் முக்கட்டியில், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்வதாக வந்த புகாரை அடுத்து, நெலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஊர்காவல் படை நைஜில் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அதிவேகமாக சென்ற ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். மேலும், ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் போதைப்பொருள், டாஸ்மாக் மதுபானம் கடத்தப்படுகிறதா எனவும் போலீசார் பரிசோதனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி