பந்தலூர்: மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

51பார்த்தது
பந்தலூர்: மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
பந்தலூர் தாலுகா எருமாடு அருகே ஓனிமூலா பகுதியைச் சேர்ந்த அஜீத் (28) என்ற தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அஜீத்தின் மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எருமாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜீத்தின் தற்கொலை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி