தேவர்சோலை: பசுமாடு கொன்ற புலி: மக்கள் மீண்டும் பீதி

1பார்த்தது
தேவர்சோலை: பசுமாடு கொன்ற புலி: மக்கள் மீண்டும் பீதி
தேவர்சோலை சர்க்கார்மூலா பகுதியில் நாராயணன் என்பவரின் பசுமாட்டை புலி கடித்து கொன்றதால் உள்ளூர் மக்களிடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 25-க்கும் மேற்பட்ட மாடுகள் புலித் தாக்குதலில் உயிரிழந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி ஒரு புலி கூண்டில் சிக்கி விடுவிக்கப்பட்டது. எனினும், நேற்று மீண்டும் ஒரு புலி தாக்குதல் நடத்தியுள்ளது. இது அதே புலியா அல்லது வேறு புலியா என்பதை கண்டறிந்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி