உயிலட்டி: நீர்வீழ்ச்சியில் சோகம்-குளிக்கச் சென்ற இளைஞர் பலி

82பார்த்தது
உயிலட்டி: நீர்வீழ்ச்சியில் சோகம்-குளிக்கச் சென்ற இளைஞர் பலி
கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் நேற்று நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். சீகூளா கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் ராஜ்குமார் (வயது 31) நண்பர்களுடன் உயிலட்டி நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளார். 

அப்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் ராஜ்குமார் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த கோத்தகிரி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிலட்டி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி