நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயிலாகவும் சுற்றுலா தலமாகவும் உள்ள மசினக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இ-பாஸ் மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இம்மூலம், மசினக்குடி வனப்பகுதிக்கு அனுமதியின்றி செல்லும் பயணிகளை தடுக்கும் வகையில், இணையதளம் மற்றும் செயலி வாயிலாக முன்பதிவு முறையில் அனுமதி வழங்கப்படும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
• மசினக்குடி இ. பாஸ் நுழைவாயிலில் தொலைநோக்கக் கண்காணிப்பு, QR குறியீடு சோதனை மையம்
• சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து இ-பாஸ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்
• வாகன எண்ணிக்கை மற்றும் நபர் எண்ணிக்கைக்கு வரம்பு பதிவு செய்யபடும் என கூறப்படுகிறது.