கோத்தகிரி: நாயை வேட்டையாட முயன்ற கருஞ்சிறுத்தையால் பரபரப்பு

74பார்த்தது
கோத்தகிரியில் இரவு நேரத்தில் தனியார் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற கருஞ்சிறுத்தையால் பரபரப்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி உலா வருவதாலும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இந்த நிலையில் இரவு நேரத்தில் கோத்தகிரி கே.எம்.எப் மருத்துவமனை வளாகத்தில் நாயை வேட்டையாட முயன்ற கருஞ்சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. எப்போதும் நள்ளிரவில் வரும் சிறுத்தைகள் தற்போது மாலை நேரத்தில் வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி