உதகை: குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை

591பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் நாளுக்கு நாள் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சிறுத்தைகள், கரடிகள் போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலாவருவதோடு செல்லப்பிராணிகளை வேட்டையாடுவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் உதகை தாஸ் பிரகாஷ் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று உலாவருவதாகவும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களை வேட்டையாடுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். எனவே மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே தாஸ் பிரகாஷ் குடியிருப்பு பகுதியில் உலாவரும் சிறுத்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, கால்தடங்களை சேகரித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you